கொழும்பு, யாழ்ப்பணம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடரங்கு சட்டம் நீக்கம்!

கொழும்பு, கம்பஹா,புத்தளம், யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணிக்கு காவலதுறை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டு எதிர்வரும் 27ம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதேவேளை நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஏனைய மாவட்டங்களில் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை 26ம் திகதி காலை 6 மணிவரையில் அமுலில் இருக்கும்.